அண்ணாமலை கட்சியில் இணைகின்றாரா ராகவா லாரன்ஸ்.... இரண்டு தினங்களில் தெரியும் உண்மை
நடிகர் ராகவா லாரன்ஸ் அண்ணாமலை உடன் கட்சியில் இணைவதாக தகவல் வெளியாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது.
நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல திறமைகளில் அசத்தி வருகின்றார் ராகவா லாரன்ஸ்.
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் ராகவா லாரன்ஸை தான் நிறுத்தப் போகின்றார் என்ற தகவல் வெளியான நிலையில் இதற்கான விளக்கத்தினை ராகவா லாரன்ஸ் அளித்துள்ளார்.
அதாவது தற்போது தான் Benz படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவரும் நிலையில் 10ம் தேதியும் இதன் படப்பிடிப்பு முடிகின்றது.

பின்பு தாயின் ஆசீர்வாதத்துடன் தனது வாழ்க்கையில் முக்கிய முடிவை எடுக்க உள்ளேன் என்றும் ஜுன் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு தனது முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவர் அளித்துள்ள பதிலை வைத்து அரசியலில் இறங்கும் முடிவில் இருக்கின்றார் என்ற முடிவிற்கு மக்கள் வந்துள்ளனர். தற்போது எந்த கட்சியில் யாருடன் கைகோர்க்க போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலையுடன் இணைகிறாரா?
அண்ணாமலை பாஜகாவில் இருந்துவந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகி We The Leaders என்ற இயக்கத்தின் மூலம் மக்களை ஒன்று திரட்டி முறையான கட்டமைப்புடன் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த உத்வேகத்திற்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான் காரணம் என்று கூறி வருகின்றனர். அதே போன்று தான் விஜய்யின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தான் ராகவா லாரன்ஸ் கட்சியில் இணைகின்றார் என்றும் பேசப்படுகின்றது.

இதனால் விஜய் மற்றும் அண்ணாமலை இருவரில் யாருடன் கைகோர்ப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இடை தேர்தலில் போட்டியிட ஆலோசித்து வரும் நிலையில், இரண்டு தொகுதிகளை தேர்வு செய்துள்ளார்களாம்.
திருச்சி கிழக்கு, பெருந்துறை ஆகிய தொகுதிகள் ஆகும். திருச்சி தொகுதியில் ராகவா லாரன்ஸும், பெருந்துறையில் அண்ணாமலையும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். முதலில் கட்சியில் இணைந்து தீவிர களப்பணி ஆற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.