தெருநாய், வாடகை வீடு என ராகவா லாரன்ஸ் பேசிய வார்த்தை... ஆரம்பமாகிய சர்ச்சை

Raghava Lawrence Tamil nadu
By Manchu Jun 16, 2026 04:23 AM GMT
Report

நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழையும் நிலையில், நேற்றைய தினம் அவர் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திருச்சியில் த.வெ.க

தமிழக வெற்றிக் கழகம் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில், இதில் 108 இடங்களை வென்றது.

இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி

அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி

இந்த தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்று கூறிவந்த நிலையில், ராகவாவின் தாயும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களிடம் முடிவு கேட்டு ராகவா லாரன்ஸ் காணொளி வெளியிட்டிருந்தார்.

அவரது ரசிகர்களும் மேள தாளத்துடன் சென்று ராகவா லாரன்ஸை உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்துள்ளனர். தனது இல்லத்தில் உள்ள ரகவேந்திரா கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.

தெருநாய், வாடகை வீடு என ராகவா லாரன்ஸ் பேசிய வார்த்தை... ஆரம்பமாகிய சர்ச்சை | Raghava Lawrence Controversial Talk Street Dog

சர்ச்சையான பேச்சு

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் முதலில் வீடு தேடி வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு, அரசியலுக்கு வருமாறு மக்கள் தனது முடிவை கூறிவிட்டனர். 

தனது தாயை மேடையில் ஏற்றி இந்த முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும், தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல... அக்கட்சியின் அம்புக்குறிகள் என்றார்.

தெருநாய், வாடகை வீடு என ராகவா லாரன்ஸ் பேசிய வார்த்தை... ஆரம்பமாகிய சர்ச்சை | Raghava Lawrence Controversial Talk Street Dog

மேலும் இந்த சந்திப்பின் போது சில ஒப்பீடு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தவெக அரசிற்கு சில காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்... ஒரு புதிய வீட்டுக்கு சென்றால் ஓனர் சாவி கொடுத்து உள்ளே போன பின்பு தான் வீட்டில் என்னென்ன பிரச்சனை இருக்கும் என்பது தெரியவரும். ஒரு வீட்டிற்கு இவ்வாறு என்றால் நாட்டையே கொடுத்துள்ளோம்... சற்று அவகாசம் தேவை என்றார்.

இவ்வாறு வாடகை வீடு மட்டுமின்றி தெருநாயையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். சாலையில் ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது தெருநாய் கத்தும். அப்பொழுது அதுக்கு பிஸ்கட் போடனும், அவ்வாறு பிஸ்கட் சாப்பிடவில்லை என்றால் அதற்கு பிடித்ததை போட வேண்டும்.

தெருநாய், வாடகை வீடு என ராகவா லாரன்ஸ் பேசிய வார்த்தை... ஆரம்பமாகிய சர்ச்சை | Raghava Lawrence Controversial Talk Street Dog

நாய்குட்டிக்கு இப்படி என்றால், நாம் நாட்டையே கொடுத்துள்ளோம். அதற்கான அவகாசத்தினை கட்டாயம் கொடுக்க வேண்டும். எதிர்கட்சியில் வைக்கும் கடுமையான விமர்சனத்திற்கு பொறாமை தான் காணரம் என ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்.

இவ்வாறு தெருநாய், வாடகை வீடு என்று ஒப்பிட்டு பேசியுள்ளது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.