''ரகானேவுக்கு நடந்தது துரோகம்".. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்திய அணியில் விராட் கோலி, டிராவிட் ஆகியோர் இருந்து ரகானேவுக்கு துரோகம் நடந்திருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மட்டும் கடந்த 16ம் தேதியன்று ஜோசன்பர்க்கிற்கு சென்றடைந்தது.
இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்தியுஅ அணி வென்றதில்லை. எனவே அணி வீரர்களை மிகவும் கவனத்தோடு தேர்வு செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் டிராவிட், கோலி ஆகியோரை மீறி ரகானேவுக்கு துரோகம் நடந்துள்ளது. துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
அப்படி என்றால் அடுத்த துணைக்கேப்டனாக ரகானே மீண்டும் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அயல்நாடுகளில் ரகானேவின் அனுபவம் அதிகம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் துணைக்கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் , இந்திய அணியில் விராட் கோலி, டிராவிட் ஆகியோர் இருந்து ரகானேவுக்கு துரோகம் நடந்திருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.