மிரட்டலான லுக்கில் திகில் தெறிக்கும் ராகவா லாரன்ஸின் ‘துர்கா’
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
பேய் கதைகளை மையமாக கொண்டு படம் எடுப்பதில் கில்லாடியான நடிகர் ராகவா லாரன்ஸ் முனி,காஞ்சனா, காஞ்சனா -2, காஞ்சனா-3 ஆகிய சீரிஸ் படங்களை எடுத்து பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளினார்.
#Durga second look! #RagavendraProductions pic.twitter.com/XjNhGhmylU
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021
இதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிப்பில் லஷ்மி என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கியிருந்தார். இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவர் நடிக்கவுள்ள படத்திற்கு ‘துர்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் நீண்ட தாடி மற்றும் மீசையுடன் ஒரு பழைய சாமியார் தோற்றத்தில் காணப்படுகிறார். இதன்மூலம் மீண்டும் அவர் பேய் கதையை மையமாக கொண்டு படம் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
[
துர்கா படம் தொடங்குவது எப்போது, இயக்குநர், சக கலைஞர்கள் யார் என்ற விவரத்தை வெளியிடாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். இதனைத் தவிர நடிகராக லாரன்ஸ் கதிரேசன் இயக்கிவரும் 'ருத்ரன்', துரை.செந்தில்குமார் இயக்கவுள்ள 'அதிகாரம்', பி.வாசு இயக்கவுள்ள 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.