விடைப்பெற்ற ரோஜர் பெடரர் - துக்கம் தாங்காமல் அழுத ரஃபா

Rafael Nadal Roger Federer
By Nandhini 5 மாதங்கள் முன்

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர். இவர் சமீபத்தில் தன் ஓய்வை அறிவித்தார்.

ரோஜர் பெடரரின்  கடைசி ஆட்டம்

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்திருந்தார். 

லண்டனில் நேற்று நடந்த லேவர் கோப்பை தொடரில் தன்னுடைய கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடினார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின.

ஐரோப்பிய அணியில் இடம் பெற்றிருந்த ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடினர். அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சாக்- பிரான்ஸஸ் டியோபோ இணைந்து விளையாடினர்.

இதனால் இறுதி செட்டில் விறுவிறுப்பு கூடிய நிலையில் ஆட்டம் வெகு நேரம் நீடித்தது. இறுதியில் 9-11 என்ற கணக்கில் ஃபெடரர்- நடால் இணை போராடி தோல்வி அடைந்தது.

கடைசி போட்டியில் விளையாடிய பிறகு ஃபெடரர் பேசுகையில், எனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

rafael-nadal-roger-federer

வைரலாகும் வீடியோ

ரோஜரின் தன்னுடைய இறுதிப் போட்டிக்குப் பிறகு நண்பர் ரஃபா அழுவதைப் பார்த்தார். அப்போது துக்கம் தாங்காமல் அவரும் அழுதார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரோஜரின் ரசிகர்கள்.. என்ன ஒரு அழகான தருணம்... இவர்களின் நட்பு மிகவும் ஆழமானது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.     தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.