தாமரை சின்னத்தில் ராதிகா சரத்குமார் போட்டி - விருதுநகர் தொகுதியில்..?
பாஜகவின் தாமரை சின்னத்தில் ராதிகா சரத்குமார் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதிகா சரத்குமார்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா மற்றும் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனது கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தனக்கு ஏற்கெனவே வழங்கியதன் அடிப்படையில் வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளோம். 3வது முறையாக மோடி பிரதமராக பாஜக கூட்டணியில் போட்டியிட உள்ளது.
தேர்தலில் போட்டி
கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது உள்ளிட்ட மற்ற விவரங்களை ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி மாணிக்கம் தாகூர் எம்.பி., காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.