எவ்வளவு நாள் தான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிக்கிறது - சீரியல் நடிகை வேதனை!
அட்ஜெஸ்ட் செய்து நடிப்பது குறித்து சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
ராதிகா ப்ரீத்தி
பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமானவர் ராதிகா பிரீத்தி. திடீரென அதிலிருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில் அதுகுறித்து பேட்டி அளித்துள்ளா ப்ரீத்தி,
"சீரியலில் நடித்தபோது ஒரு பேச்சிலர் ரூமுக்கு என்னை அனுப்பி அங்கு ரெடியாகுங்கள் என்று சொன்னார்கள். யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்து போனேன். ஆனால் அங்கு ஒருவர் சட்டை போடாமல் டவுசருடன் படுத்திருந்தார்.
எவ்வளவு நாள் தான்..
சரி நான் உள்ளே போனதும் அவர் வெளியே போய்விடுவார் என்று நினைத்தேன். அந்த நபரோ வெளியே போகவே இல்லை. நான் வெளியே வந்து அந்த இடத்தில் எப்படி தயாராக முடியும் என்று கேட்டேன். அவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் எல்லாம் எங்கெங்கோ சென்று தயாராகிறார்கள். உனக்கு என்ன வந்தது என கேட்கிறார்கள்.
உனக்கு என்ன எல்லாமே கொடுக்கணுமா? இங்கு இப்படி தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி தான் இருக்கணும் என்ன சொல்லிவிட்டார்கள். எவ்வளவு நாள் தான் நானும் அட்ஜஸ்ட் செய்து நடிப்பது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.