அம்மாவின் உடலை கண்டு கதறிய நிரோஷா - பிரவுவை பார்த்ததும் வெடித்து அழுத ராதிகா!
நடிகை ராதிகா சரத்குமாரின் அம்மாவும், நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா காலமானார்.
கீதா ராதா மறைவு
அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் 3வது மனைவி தான் கீதா. இவரது மகள்கள் தான் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா. அவரது உடலுக்கு திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரைபிரபலங்கள் அஞ்சலி
மறைந்த முதல்வர் கருணாநிதி மகள் செல்வி, நாசர், பாக்யராஜ், பூர்ணிமா, பொன்வண்ணன் உள்ளிட்டோர் திரண்டு வந்து மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பிரபுவை பார்த்ததுமே ராதிகா கதறி அழுதார். அதேபோல நாசரின் கைகளை பிடித்து கொண்டு, நிரோஷா அழுதுகொண்டேயிருந்தார்.
தொடர்ந்து ராதிகா, நிரோஷாவை திரைப்பிரபலங்கள் சமாதானம் செய்து, ஆறுதல் கூறி வருகின்றனர்.