கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Radikaa Sarathkumar radhika ராதிகா சரத்குமார்
By Petchi Avudaiappan Dec 15, 2021 12:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 நீச்சல் உடையில் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலுமே கொடிகட்டி பறக்கும் நடிகை ராதிகா சரத்குமார் இன்றும் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.  ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் என கூறியிருந்தார். 

இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை ராதிகா வெளியிட்டு இருக்கிறார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வயதே ஆகவில்லை..இளமை திரும்புதே... என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.