உங்க உறவுல அதை மட்டும் கண்டிப்பா பண்ணாதீங்க - சீரியஸ் அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகை
காதல் உறவில் இருப்பவர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே தீவிர அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ராதிகா ஆப்தே
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக ஏற்று நடிப்பவர். தமிழில், தோனி, வெற்றி செல்வன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பெனடிக்ட் என்ற வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ராதிகா அளித்துள்ள பேட்டி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆபத்தாக முடியும்
அதில், தானும் தனது கணவரும் தங்களுக்கு பிடித்தமாதிரி சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். திருமணமான தம்பதிகள் மற்றும் காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் இணையுடன் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் மூன்றாவது நபரின் ஆலோசனையை பெறாதீர்கள்.

இது உங்களின் உறவிற்கு ஆபத்தாக முடியும். எப்போது மூன்றாம் நபர் உங்கள் உறவுக்குள் வருகிறாரோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் விழ தொடங்கிவிடும். நம்முடைய பிரச்சனையை நம்மை தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil