‘மற்ற நடிகைகளின் செயலால் மிகுந்த மன உளைச்சலால் பாதித்தேன்’ - பிரபல நடிகை ஓப்பன் டாக்!
தமிழில் ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்தி பிரபலானவர் நடிகை ராதிகா ஆப்தே.
இவர் தமிழ் படங்களை தவிர்த்து மராத்தி, பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் ராதிகா ஆப்தே ஃபேஷன் செய்தித்தளமான ஹாட்டர்ஃபிளை-விற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பேசிய அவர் சினிமா துறையில் நிலைத்து நிற்பதற்காக நடிகைகள் தங்களின் உடல் அழகையும் சரும அழகையும் மேம்படுத்திக்கொள்ள பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர் என்றும், பாடி பாசிட்டிவிட்டியை பற்றி பேசும் நடிகைகளே நிஜ வாழ்வில் இவ்வாறு செய்வது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பு தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறிய ராதிகா, தான் நடிக்க விரும்பிய பல படங்களுக்கான வாய்ப்புகள் மற்ற நடிகைகளுக்கு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்.
அந்த நடிகைகள் தங்களின் வயது முதிர்வை குறைத்துக்கொள்வதற்காக பல்வேறு சிகிச்சைகள் செய்துகொண்டதாகவும் அதன் காரணமாகவே தனக்கான வாய்ப்பு பறிப்போனதாகவும் அவர் தெரிவித்தார்.