அரசியல்வாதி நீங்க.. நான் இல்ல; அதைப் பத்தி பேசாதீங்க - சரத்குமாரிடம் கொந்தளித்த ராதிகா!

Sarathkumar Raadhika Tamil nadu
By Sumathi Feb 21, 2024 07:42 AM GMT
Report

சரத்குமாரின் கருத்துக்கு ராதிகா கோபமாக பதிலளித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ராதிகா -  சரத்குமார்

ராதிகா சரத்குமார் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து பதிவு போட்டிருந்தார். கடுமையாக விமர்சித்து நாகரீகம் கருதி படம் பெயரை குறிப்பிடாமல் சாடியிருந்தார்.

raadhika sarathkumar

அதனைப் பார்த்த பலர் அது அனிமல் படம்தான் என கமெண்டுகளை குவித்தனர். இந்நிலையில், ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டனர். அதில், ராதிகாவிடம் அந்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதை பத்தி பேசாதீங்க.. அந்த படத்தை பற்றி நான் இரண்டு நாளா புலம்பி விட்டேன் என ராதிகா தெரிவித்தார்.

அந்த நடிகையை கரம்பிடிக்கும் நடிகர் சிம்பு - பிரபல நட்சத்திர ஜோடியின் மருமகனாகிறார்?

அந்த நடிகையை கரம்பிடிக்கும் நடிகர் சிம்பு - பிரபல நட்சத்திர ஜோடியின் மருமகனாகிறார்?

விமர்சனம் குறித்த விளக்கம்

அதற்கு சரத்குமார் அது ராதிகா உடைய கருத்து. அதோடு சிலர் அந்த படத்தை வேற மாதிரி நினைக்கிறார்கள். அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள் அது எனக்கு புரியவில்லை என்றுள்ளார். உடனே ராதிகா, அந்தப் படம் perversion மற்றும் குப்பை.

அரசியல்வாதி நீங்க.. நான் இல்ல; அதைப் பத்தி பேசாதீங்க - சரத்குமாரிடம் கொந்தளித்த ராதிகா! | Radhika Angry Responded Sarathkumars Movie Comment

நீங்கதான் அரசியல்வாதி நான் உங்களை மாதிரி அரசியல்வாதி கிடையாது. அதனால நான் உங்கள மாதிரி பேசணும்னு எந்த அவசியமும் இல்லையே எனத் தெரிவித்தார். மேலும், நாங்கள் அந்த நேரத்தில் நல்ல படம் பண்ணனும் நல்லா கதை இருக்கணும் என்றெல்லாம் யோசித்தோம்.

ஆனால் இப்போ இருக்கிறவங்களில் ஒரு சிலர் அப்படி யோசிப்பதில்லை என்று எனக்கு தோணு, ஆனால் இப்போது இருக்கும் நடிகைகளால் எங்களை மாதிரி எல்லாம் இருக்க முடியுமா என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.