நயன்தாராப் பற்றிப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி

controversy bjp nayanthara radha ravi
By Jon Mar 31, 2021 06:36 PM GMT
Report

நடிகை நயன்தாரவைப் பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராதாரவி. நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள்.

ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார். இது மிகவும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை எதிரொலியாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த பிரச்சாரத்தின் போது, நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன். நயன்தாரா யாரு? திமுக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரா? திமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன உறவு? உதயநிதிக்கும் நயன்தாராவிற்கும் உறவு என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று பேசியிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி வருகிறது.