100ல் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 100ல் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 10 நாட்களுக்கு முன்பு 100 பேரை பரிசோதித்தால் கொரோனா தொற்று 1 என இருந்தது. தற்போது 100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வருகிறது.
கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது
சென்னையில் முன்பு நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பேரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் கொரோனாவுக்கான ரேண்டம் பரிசோதனையை அதிகரித்துள்ளோம்.
சென்னையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தகுதியானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.