தேவைபட்டால் மினி ஊரடங்கு நடைமுறையில் வரலாம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. அதிகம் பாதிக்கபட்ட பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஊரடங்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாட்டாது என கூறியுள்ளார்.
அதே சமயம் , கொரோனா அதிகம் பாதிக்கபட்ட தெருக்கள், வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் (மினி)ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறினார். ஆகவே, முழு ஊரடங்கு என யூகத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறிய ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், பொது மக்கள் தடுப்பூசியும் போட்டு கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.