கரும்பூஞ்சையால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை..! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..!
கரும்பூஞ்சை நோயால் இதுவரை தமிழகத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
[Z7BQS4 ]
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கருப்பு பூஞ்சை நோயால் மக்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் இது கொரோனாவுக்கு முன்னரே கண்டறியப்பட்ட நோய் என்றும் கூறியுள்ளார்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்ட் மருந்து எடுத்து கொள்வதால் இந்த நோய் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்றும், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9 பேர் கருப்பு பூஞ்ஜை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்ஜை நோயால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், இறந்தவரின் நுரையிரலில் 80% தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து கருப்பு பூஞ்ஜை நோயை கட்டுபடுத்த 5 ஆயிரம் தடுப்பு மருந்துகள் வரும் திங்கட்கிழமை வரயிருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இந்த நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசிடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.