தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?
அரசியல் பொதுக்கூட்டங்களில் முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு கட்சியினர் வலியுறுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , தமிழகத்தில் அரசியல் கூட்டங்களாலும், குடும்ப நிகழ்ச்சிகளாலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறினார்.
19 மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெறும் கூட்டங்களில், முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். அபராதம் விதித்தால் மட்டுமே பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து காணப்பட்ட இடங்களில் இம்முறை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
கொரோனா ஊரடங்கு மீண்டும் தமிழகத்தில் அமலபடுத்தபடுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.