உஷாரா இருங்க , தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட சுகாதாரத்துறை
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்றே குறைத்து வந்தது. ஆகவே , கொரோனா கடுப்பாடுகளை முழுவதும் வாபஸ் பெறுவதாக அறிவித்தது மத்திய அரசு, அதே போல் பொதுமக்கள் முகக்ககவசம் அணிய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியது.
இந்த நிலையில்,கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை 25 கீழ் பதிவாகி வந்த கொரோனா தொற்று தற்போது 30 க்கு மேல் பதிவாகியுள்ளது, தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் தினசரி 25 கீழ் பதிவாகி வந்த கொரோனா தொற்று, தற்போது 30 க்கு மேலாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.