’ராதாரவிக்கு ஒரு நியாயம்? ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?’ – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

dmk nayan stalin rasa radha ravi
By Jon Mar 31, 2021 12:13 PM GMT
Report

திமுக எம்.பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருந்தது/ ஆ.ராசாவின் பேச்சால் கொந்தளித்த அதிமுகவினர் அவரை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தனர்.

பிரச்சாரத்தில் முதல்வரும் ராசாவை கடவுள் தண்டிப்பார் என்று கூறி கண்ணீர் விட்டு அழுததையடுத்து, ராசா மன்னிப்பு கோருவதாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது - “திமுகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால் தான் தன் பேச்சுக்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்டார்.

அவர்கள் கட்சியில் எல்லோரும் அப்படித்தான். ராதாரவிக்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா? ஆ.ராசா மீது ஸ்டாலின் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக மீது மக்களுக்கு நல்ல கருத்து இருக்கும். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், திமுக சொல்லித்தான் ஆ.ராசா பேசினாரா? தான் பேசியதைத் திரித்து சமூக வலைதளங்களில் உலாவிட்டிருந்தால் ஆ.ராசா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே. அப்போது அவர் பேசியது உண்மைதானே?” என்றார்.

’ராதாரவிக்கு ஒரு நியாயம்? ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?’ – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்! | Radha Ravi Rasa Minister Jayakumar

2019ம் ஆண்டு கொலையுதிர் காலம் பிரஸ் மீட்டில் நயன்தாரா குறித்து ராதாரவி இழிவாகப் பேசினார். அப்போது ராதாரவியின் இந்த பேச்சுக்கு, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் பின்னர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர், அவர் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக வேட்பாள்ர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.