‘உங்க படம் பார்த்தா அப்படியே கொல்லனும் போல இருக்கு’ - ரஜினியை சீண்டிய ராதா ரவி… - ரசிகர்கள் ஷாக்...!

Rajinikanth Radha Ravi
By Nandhini Dec 26, 2022 12:10 PM GMT
Report

“உங்க படம் பார்த்தா கொல்லனும் போல தோணுது” என்று ரஜினியை வம்புக்கு இழுத்த ராதா ரவியின் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராதா ரவி -

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ராதா ரவி. இவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். ஆனால், சமீப காலமாக பேட்டிகளில் சினிமாவ பத்தியும், ஹீரோ, ஹீரோயின்களைப் பற்றியும் சர்ச்சையாக பேசிவிடுகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு நயன்தாரா நடிப்புல உருவாகி இருந்த ‘கொலையுதிர் காலம்’ படத்தோட செய்தியாளர் சந்திப்புல கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நயன்தாராவைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

நயன்தாராவைத் தொடர்ந்து நடிகை தமன்னாவையும் சர்ச்சையாக பேசினார். இதனால், சினிமாத்துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, திமுக கட்சியில் இருந்த இவர் உடனடியாக நீக்கப்பட்டார்.

radha-ravi-rajinikanth

உங்க படம் பார்த்தா கொல்லனும் போல தோணுது -

ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் ராதாராவி பேசும்போது ரஜினிகாந்த் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் நடிகர் ராதா ரவி பேசும்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “அருணாச்சலம்” ராதா ரவி நடிப்பதாக இருந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், இவரை வீட்டிற்கு அழைத்து “நீங்கள் இப்படத்தில் இல்லை. நாங்கள் வேறு ஒரு நடிகரை போட்டுவிட்டோம்” என்று கூறினார்.

இப்படி நம்மை நேரில் கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்துகிறாரே என்று மனதில் நினைத்தேன். உடனே நான் ரஜினியை பார்த்து “சினிமாவில் உள்ள சாபக்கேடு என்னவென்றால் திறமை அதிர்ஷ்டத்தை நோக்கி வரவேண்டியதாக இருக்கிறது என்று கூறினேன்.

“நாயகன்” திரைப்படத்தை குறித்து ஒரு முறை ரஜினியிடம் என்னிடம் பேசும்போது, “நாயகன்” திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன் என்று ரஜினியிடம் கூறினேன்.

அதற்கு ரஜினிகாந்த் “அப்படியா?” என்று கேட்டார். மறுபடியும் நான், இன்னொரு படத்தைப் பார்த்து கொல்ல வேண்டும் என்று தோன்றியது என்று கூறினேன். அதற்கு ரஜினி என்ன படம்? என்று கேட்டார். அதற்கு நான் ‘மனிதன்’ படம் என்று பதில் கூறினேன்.

இதனை கேட்டதும் ரஜினி “யோவ், அது நான் நடிச்ச படம்தான்யா” என்றார். “ஆமா சார், நீங்க நடிச்ச படம்தான்” என்று அவரிடமே தைரியமாக கூறிவிட்டேன். அது ஏன் சார், அணுகுண்டை சட்டையில் தொங்கவிட்டு சண்டை போட்றீங்க? அது என்ன சட்டை டிசைனா? என்று நக்கல் அடித்தேன். அதற்கு ரஜினி “யோவ், யார்யா நீ இப்படி எல்லாம் பேசுற” என்று சிரித்துவிட்டார் என்று தெரிவித்தார்.