நான் அதிர்ஷ்டசாலி அல்ல!!! மகளின் நிச்சயம் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகை ராதா!!
அண்மையில் நடிகை ராதாவின் மகளான கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை கார்த்திகா
ஜுவாவின் நடிப்பில் வெளியான "கோ" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கார்த்திகா. பிரபல நடிகை ராதாவின் மூத்த மகளான இவர் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகினார்.
பெரிய நாயகியாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையாமல் போனது.கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் அறிமுகமானாலும் பெரிய வெற்றி படங்கள் எம்மொழியிலும் கார்த்திகா நாயருக்கு அமையவில்லை.
ராதா பதிவு
அதன் காரணமாக சொந்த தொழிலை பார்க்க வெளிநாடு சென்றுவிட்டார் கார்த்திகா. இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இது குறித்து தனது சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகை ராதா, விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு எங்கள் பெண்ணைப் கொடுப்பது பற்றி பெருமையே . ஆனால் அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உனக்கு இந்த அழகான குடும்பத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக என்னை அதிர்ஷ்டசாலி என்று நான் சொல்ல முடியாது.
ஆனால் திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதைப் பற்றியது என்று நான் நம்புகிறேன். என் இதயம் இப்போது பல கலவையான உணர்வுகளுடன் இயங்குகிறது. ஆனால் அதிக அதிர்வு உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே. எந்த தாயும் விரும்பும் ஒரு சிறந்த மகள் கர்து. நீ எங்கள் குடும்பத்திற்கு சிறந்த பரிசாக இருந்திருக்கிறாய். நீ எனக்கு அளித்த இந்த அற்புதமான அனுபவத்திற்கு நன்றி அன்பே என தெரிவித்துள்ளார்.