மகள் கார்த்திகாவின் கல்யாணம்...ராதாவிற்கு ஏற்பட்ட மனக்கஷ்டம்??
நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிற்கு அண்மையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
ராதா - கார்த்திகா
80-களில் மிகவும் முக்கியமான தென்னிந்திய நடிகையாக இருந்தவர் நடிகை ராதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து, அப்போதைய அநேக முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவரின் மூத்த மகள் கார்த்திகா, ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டில் வெளியான "கோ" படத்தில் தமிழில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து முன்னணி நாயகியாக உருப்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் அவருக்கு பெரிதாக அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை.
திருமணம்
வாய்ப்புகள் குறைந்த நிலையில், தொழிலை கவனித்து வந்த கார்த்திகா, கடந்த மாதம் 19-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் முன்னிலையில் ரோகித் மேனன் என்பவரை கரம்பிடித்தார்.

மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் இந்தியாவை சேர்ந்த பல 80-களின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.
ராதாவிற்கு வருத்தமா..?
ஆனால், இந்த திருமணத்தில் நடிகை ராதாவிற்கு சற்று மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலருக்கும் பத்திரிக்கை அளித்துள்ள நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு அவர் பத்திரிக்கை வழங்கவில்லை என்ற பேச்சு எழுந்ததாக கூறினார்.

மேலும், முன்ணனி நட்சத்திரங்கள் பலரும் வருவார்கள் என ராதா நம்பிய நிலையில், சிலர் வருகை தராதது அவருக்கு வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு IBC Tamil