அமெரிக்காவில் இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல்
அமெரிக்காவில் இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்க பெண் அதிரடி கைது.
இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்கள் 4 பேர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள வாகன நிறுத்தத்தில் உள்ள தங்கள் காரை எடுக்க வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர், இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அப்போது அந்த அமெரிக்க பெண் இந்திய பெண்களை பார்த்து தான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்தியர்கள் சிறந்த வாழ்க்கைக்காக அமெரிக்காவிற்கு வருகிறார்கள்.
நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் நீங்கள் இருக்கிறீர்கள், இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?
இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள் என் ஆவேசமாக கூறி சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.