இந்தியாவுக்கு திரும்பி போ - 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனவெறித் தாக்குதல்
அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டில் அச்சுதன் என்ற செவிலியர், தனது கணவருடன் எட்டு வருடங்களாக வசித்து வருகிறார். சமீபத்தில் ஐரிஷ் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவரது குழந்தைகள் அந்த நாட்டில் பிறந்தனர்.
இந்நிலையில் அவருடைய 6 வயதுக் குழந்தை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது 8 வயது சிறுமி மற்றும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். மேலும், நியாவை அழுக்கானவள் என்றும் இந்தியாவுக்கே திரும்பிப் போ என்றும் சொல்லிச் சாடியுள்ளனர்.
உடனே சிறுமி வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். இதுகுறித்து தாய் கூறுகையில், ”என் மகள் வீட்டுக்குள் வெளியே அங்கிருந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு எனது மகன் பசியால் அழவே, அவனுக்கு உணவு கொடுப்பதற்காக நான் வீட்டுக்கு வந்தேன்.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
அந்தச் சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவளால் பேசக்கூட முடியவில்லை. அவள் மிகவும் பயந்துபோயிருந்தாள். என் மகளை நான் அப்படி ஒருபோதும் பார்த்ததில்லை. நான் அவளுடைய தோழிகளிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர்கள், அனைவரும் மிகவும் வருத்தப்பட்டனர்.
அவர்களால் பேச முடியவில்லை. அவளுடைய தோழிகளில் ஒருவர், ’அவர்களைவிட வயதான பையன்கள் ஒரு கும்பல் சைக்கிளால் அவளை அந்தரங்க பாகங்களில் அடித்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் அவள் முகத்தில் குத்தியதாகவும் கூறியதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சிறுவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்றும் உளவியல் ஆலோசனையும் வழிகாட்டலுமே அளிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறியுள்ளார்.