ஆபாச உடை அணிய காரணம் இதுதான் - விளாசிய ரச்சிதா மகாலட்சுமி
ஆபாசமாக வீடியோ போடுபவர்களுக்கு லைக் செய்யாமல் கடந்து செல்லுங்கள் என ரச்சிதா மகாலட்சுமி அறிவுரை கூறியுள்ளார்.
ரச்சிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பெரிய அளவில் பிரபலமடைந்த இவர், சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஆபாசமாக உடை
அதில், சமூக வலைத்தளங்களில் சிலர் பிரபலமாக வேண்டுமென்று அரைகுறை ஆடையுடன் வீடியோ போடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அது அவர்களுடைய விருப்பம். அவர்களுடைய உடையை குறைத்து, தங்களை பிரபலமாகி கொள்ள வேண்டுமென்று அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, போடும் போஸ்ட்கள் சாதாரண பெண்களையும் பாதிக்கிறது.
பிரபலமாக வேண்டுமென்று சிலர் ஆபாசமாக உடை அணிகிறார்கள். அந்த வீடியோவை பார்ப்பவர்கள் வீடியோ போட்டவர்களை எதுவும் செய்ய முடியாது என்பதால் தெருவில் போகும் பெண்கள் மீது அவர்களின் தவறான பார்வை விழுகிறது. இதனால்தான் பல பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது.
ட்ரோல்
ஆபாசமாக வீடியோ போடுபவர்கள் லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போடுகிறார்கள். எனவே லைக் போடுபவர்கள் அதை கடந்து சென்றால், நாம் என்ன செய்தாலும் இவர்கள் கண்டு கொள்வதில்லை என ஆபாச உடை அணிந்து வீடியோ போடுவது குறைத்து விடுவார்கள்” என பேசியுள்ளர்.
இவரின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். காரணம் ரச்சிதாவே இதற்கு முன்னர் பல போஸ்டர் மற்றும் வீடியோக்களில் அரை குறை உடைகளுடன் தோற்றமளித்துள்ளார். அதே நேரம் ரச்சிதாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.