பட்டவங்களுக்கு தான் வலி தெரியும் - ஒன்னு சேர வாய்ப்பே இல்லையா..? ரச்சிதா வைரல் பதிவு
ரச்சிதாவின் கணவர் தினேஷ் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக இருந்து வருகின்றார்.
ரச்சிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டனர்.
வைரல் பதிவு
இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், எல்லா மக்களும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்போம் என்பதை பற்றி யாரும் யோசிக்கவே இல்லை" என்று கூறி, "பட்டவங்களுக்கு தானே அதோட வலி தெரியும்" என்று குறிப்பிட்டுருக்கிறார். இதன் மூலமாகவே இவர் மறைமுகமாக தினேஷ் குறித்தே தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.