ஹீரோயினாகும் விஜய் டிவி பிரபலம் - வைரலாகும் புகைப்படங்கள்
rachithamahalakshmi
By Petchi Avudaiappan
விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா கன்னட படமொன்றில் ஹீரோயினாக நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் ரச்சிதா மகாலட்சுமி ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரங்கநாயக என்ற கன்னட படமொன்றில் தான் நடித்து வருவதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதனால் அவர் நடித்து வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. குருபிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஜக்கேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாவதால் ரச்சிதாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.