தனிமை இல்லை.. பிறந்தநாளில் ரச்சிதா சொன்ன நல்ல செய்தி - குவியும் வாழ்த்துக்கள்!

Rachitha Mahalakshmi Tamil TV Serials
By Sumathi Apr 24, 2024 02:30 PM GMT
Report

ரச்சிதா தனது பிறந்தநாளில் வீடு வாங்கியுள்ள செய்தியை பகிர்ந்துள்ளார்.

 ரச்சிதா மகாலட்சுமி

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.

rachitha mahalakshmi

பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தால் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், ரச்சிதா தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

2வது திருமணத்திற்கு ரெடியான நடிகை ரச்சிதா - மாப்பிள்ளை யார் தெரியுமா?

2வது திருமணத்திற்கு ரெடியான நடிகை ரச்சிதா - மாப்பிள்ளை யார் தெரியுமா?

33 வது பிறந்த நாள்

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில், உங்களை ரச்சிதா காஸ்டலுக்கு வரவேற்கிறேன். தனிமையின் அமைதி இப்படித்தான் இருக்கும். தனது சொந்த வழியில் 33வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன்.

தனிமை இல்லை.. பிறந்தநாளில் ரச்சிதா சொன்ன நல்ல செய்தி - குவியும் வாழ்த்துக்கள்! | Rachitha Mahalakshmi Posted A Video Of New House

எனது ஒய்னுடன் நானும் எனது சிறிய வீடும். எங்க வீடு வாங்கி ஒரு வருடம் ஆகிறது. எனக்கு 33வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும், என்னுடைய வீட்டின் முதல் வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.