பிரபல நடிகை ரட்சிதாவின் விவாகரத்துக்கு இதுதான் முக்கிய காரணமாம்? வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

Rachitha Mahalakshmi
1 மாதம் முன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரட்சிதா.

இவர் ‘உப்புக் கருவாடு’ திரைப்படத்தில் 2015ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரட்சிதா. ரட்சிதா, சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை கடந்த 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் 9 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது திருமண உறவை இருவரும் முறித்துக் கொண்டுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இவர்களது பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்திற்கான காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தினேஷ் ரட்சிதா சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்தினால் குழந்தை பெற்றுக் கொண்டு நல்ல படியாக வாழலாம் என்று கூறி வந்துள்ளார். ஆனால் ரட்சிதா என் நடிப்புத் திறமையை கைவிட முடியாது என உறுதியாக இருந்து வந்துள்ளார்.

மேலும், ரட்சிதாவுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால், தினேஷுக்கு வாய்ப்புகள் வராத காரணத்தால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

திருமணம் ஆகி 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாததும் பிரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ரட்சிதா திடீரென விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகை ரட்சிதாவின் விவாகரத்துக்கு இதுதான் முக்கிய காரணமாம்? வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள் | Rachitha Mahalakshmi

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.