ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணீங்க? - பத்திரிக்கையாளரை அதிரவைத்த பிரபல நடிகை

rachitaram love u racchu
By Petchi Avudaiappan Nov 12, 2021 10:20 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

முதல் இரவில் என்ன செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளரிடம் கன்னட நடிகை ரச்சிதா ராம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல கன்னட நடிகை ரத்திதா ராம் தற்போது “லவ் யூ ரச்சு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய் ராவும், ரச்சிதா ராமும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

இதற்குமுன்  ஐ லவ் யூ படத்தில் உபேந்திராவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் தன் குடும்பத்தார் வேதனை அடைந்ததாக கூறிய ரச்சிதா இனி ஹாட் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தார். ஆனால் மீண்டும் லவ் யூ ரச்சு படத்தில் அவர் நடித்த நெருக்கமான காட்சிகளைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதனிடையே இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர்  ரச்சிதா ராமிடம் கேள்விக் கேட்டார். அதற்கு கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன். இங்கு இருப்பவர்களில் பலருக்கு திருமணமாகிவிட்டது. நான் யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. திருமணத்திற்கு பிறகு மக்கள் என்ன செய்வார்கள் என்று தான் கேட்கிறேன். என்ன செய்வார்கள்?

ரொமானஸ் செய்வார்கள் என்பதை தான் படத்தில் காட்டியுள்ளோம்.  நீங்கள் முதல் இரவில் என்ன செய்தீர்கள்? நான் அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இருக்கும். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். உங்களுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது, நீங்கள் சொல்லுங்கள் என்றார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத பத்திரிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.