மகளை கொடூரமாக தாக்கிய ரக்கூன் விலங்கு - போராடி காப்பாற்றிய தாய்... - பதற வைக்கும் வீடியோ வைரல்...!
மகளை கொடூரமாக தாக்கிய ரக்கூன் விலங்கிடமிருந்து போராடி காப்பாற்றிய தாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை காப்பாற்றிய தாய்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வாசலில் நின்றுக்கொண்டிருந்த ஒரு சிறுமியை திடீரென ஓடிவந்த ரக்கூன் விலங்கு, சிறுமியின் காலை பயங்கர கடிக்கிறது. ரக்கூன் கடித்ததில் அச்சிறுமி பயங்கரமா கத்தி அலறுகிறாள். மகளின் சத்தம் கேட்டு தாய் வெளியே ஓடிவந்து பார்த்தார்.
அப்போது, ரக்கூன் விலங்கு மகளை கடித்ததைப் பாரத்த தாய், அதிர்ச்சி அடைந்து ரங்கூனிடமிருந்து மகளை மீட்டு வீட்டிற்குள் அனுப்புகிறார். பின்னர், அந்த விலங்கை தன் கையால் பிடித்து தூக்கி வீசுகிறாள்.
தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mother of the Year ? pic.twitter.com/w7GSNrZcc2
— Hold My Beer/Holy Cow (@short_tymer) December 3, 2022