கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி : உ.பி.யில் அரங்கேறியகொடுமை!

vaccine corona Uttar Pradesh rabies
By Jon Apr 11, 2021 05:38 PM GMT
Report

உத்தர பிரதேச ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான, ரேபிஸ்தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ், 70, அனார்கலி, 72, மற்றும் சத்யவதி, 60, ஆகியோர், நேற்று முன்தினம் சென்றனர்.

அவர்கள் மூவருக்கும், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, வெறிநாய் கடிக்கான, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மாவட்ட ஆட்சியர் கூறும்போது சுகாதார மையத்தின் முதல் தளத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இவர்கள் தவறுதலாக மற்றொரு பிரிவுக்குச் சென்றதால் தவறுதலாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தபட்டு விட்டதாகவும்,தவறுக்கு காரணமான மருந்தாளரை, பணியிடைநீக்கம் செய்ய தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் பாதிக்கபட்ட அனார்கலி கூறும் போது தடுப்பூசி செலுத்திய பின்பு வீட்டிற்கு வந்ததும் மயங்கி விழுந்தேன்,என்றார்,இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.