நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்பு - உலகளவில் இந்தியாதான் முதலிடம்!
இந்தியா ரேபீஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.
ரேபீஸ் உயிரிழப்பு
அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வு முடிவுபடி, 2021ம் ஆண்டில் இந்தியாவில் 4023 பேர் ரேபீஸ் நோய் தொற்றால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இடத்தில் உள்ள எத்தியோப்பியாவில் ஆயிரத்து 43 பேர் ரேபீஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த இடத்தில் நைஜீரியா, பாகிஸ்தான், சீனா, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியா முதலிடம்
குறிப்பாக, மகாராஷ்டிராவில் 2022 முதல் கடந்த மாதம் 24ம் தேதி வரை 13 லட்சத்து 50 ஆயிரம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 12 லட்சத்து 90 ஆயிரம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் குஜராத், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்நிலையில், சர்வதேச அளவில் ரேபீஸ் நோய் தொற்று பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.