விஜய், அஜித்துக்கு போட்டியாக மாறிய ஜோதிகா - ஒரே படத்தால் உச்சம் தொட்ட சுவாரஸ்யம்

Jyothika Ratchasi Madamgeetharani
By Petchi Avudaiappan Sep 03, 2021 05:26 PM GMT
Report

 ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தின் ஹிந்தி டப்பிங் பெரும் வரவேற்பை பெற்று சாதனைப் படைத்துள்ளது.

திருமணத்துக்கு பின்னர் நடிகை ஜோதிகா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசி’ படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கி இருந்த ராட்சசி படம் ‘மேடம் கீதாராணி’ என்கிற பெயரில் இந்தியில் டப்பிங் செய்து கடந்தாண்டு யூடியூபில் வெளியிடப்பட்டது.

இந்த படம் 20 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, 20 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் இந்தி டப்பிங்கிற்கு இணையாக ஜோதிகா படத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.