சரத்குமார், ராதிகா தேர்தலில் போட்டியிடாதது ஏன்? வெளியான அறிவிப்பு
தானும் தன்னுடைய மனைவி ராதிகாவும் தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து சமத்குாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இக்கூட்டணியில் சமக-வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, பின்னர் கூட்டணியில் இணைந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்ப பெறப்பட்டதாகவும் எனவே 37 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள சமக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு இலவசங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை, அவர்களே உழைத்து பொருட்களை பெற்றுக்கொள்வார்கள் எனவும், திமுக அறிக்கையில் ஒருசிலவை மட்டுமே நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் எனவும் தெரிவித்தார்.
மேலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதற்காக தானும், தன்னுடைய மனைவியும் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.