சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு

dmk ntk mnm AISMK
By Jon Mar 03, 2021 04:30 PM GMT
Report

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராக சரத்குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தொடங்கியிருக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் இன்று பொதுக்குழு கூட்டம் ராதிகா சரத் குமார் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் சரத் குமார் கலந்து கொண்டுள்ளார். சுமார் 1000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது, தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இடத்திற்கு போட்டி நடைபெற்றது.

இதில் சரத் குமாரை தவிர யாரும் போட்டியிடாததால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத் குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பதவி பிரமாணம் செய்தார் சரத் குமார். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க போவதாக கூறப்படுகிறது.  


Gallery