நடிகர் விஜய்யை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

actorvijay rparthiban
By Petchi Avudaiappan Nov 26, 2021 11:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகர் விஜய்யை வைத்து படம் ஒன்று இயக்க விரும்புவதாக பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதிய பாதை மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய பாதையை வகுத்து கொடுத்த நடிகர் பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் படமெடுத்து வருகிறார். 

நடிகர் விஜய்யை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | R Parthiban Wish To Direct Actor Vijay

அதேசமயம் தனது பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் எல்லாம் அசால்ட்டாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் அப்படம் தேசிய விருதும் பெற்றது. 

தற்போது இப்படத்தை இந்தியில்  அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இந்நிலையில் ஒரு ஊடகம் ஒன்றிற்கு பார்த்திபன் பேட்டியளித்த போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.