என் மகன் விஜய்க்கு தம்பி கதாபாத்திரம் இருந்தா சொல்லுங்கள்... - பிரபல நடிகரிடம் வாய்ப்பு கேட்ட எஸ்.சந்திரசேகர்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
சஷ்டியப்த பூர்த்தி விழா
சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.சந்திரசேகருக்கும், தாய் ஷோபாவிற்கும் திருக்கடையூரில் 80வது சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது. தன்னுடைய 80வது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். ஆனால், இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் பேட்டி
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் -
ரொம்ப வருடத்திற்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் எங்கள் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்கு விஜய்யை கூட்டிக்கொண்டு வருவார். அப்போது, விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த தருணம். ஒரு நாள் அவர் என்னிடம் என்னுடைய பையனுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து விடுங்க. ஒரு படத்தில் தம்பி மாதிரி போடுங்களேன் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் கேட்டார்.
விஜயகாந்த் சார் படத்துல... விஜய்யை கொண்டு வந்தது.. ஒரு சிறிய சிறிய ரோலில் விஜய்யை கொண்டு வந்தது பெரிய விஷயம்தான். ஆனால், பெரிய ஹீரோவாக வளர்ந்த பிறகு அவுங்களே அவுங்களுக்கான விஷயங்களை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் என்று பேசியுள்ளார்.