பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா விவகாரம் - ஆளுநருக்கு சீமான் கண்டனம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபாத்தான அமைப்பு என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பயங்கரவாத அமைப்பு என கடுமையாக சாட்டினார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபத்தான அமைப்பு , மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு, என்ற முகமூடிகளை பயன்படுத்துகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுவதாக ஆளுநர் விமர்சித்தார். அரசியல் லாபத்திற்காக வன்முறையை துாண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் அவர் தெரிவித்தார். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம் என்று பேர் பேசியிருந்தார்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பதிவில்,
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஆளுநர் உமிழ்ந்திருக்கும் கருத்துகள் உள்நோக்கம் கொண்டவை. மதப்பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் விதமான ஆளுநரின் கருத்துகள் ஆபத்தானவை. இது நாகலாந்து அல்ல, ஆரியத்தை வீரியமாய் எதிர்த்து வென்ற தமிழ்நாடு என்று நினைவூட்டுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.