தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும்... - பட்டமளிப்பு விழாவில் தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி

R. N. Ravi
By Nandhini May 16, 2022 07:46 AM GMT
Report

சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநரும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக துணை வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிலையில், இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.

மேலும் அவர் பேசுகையில், பிற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சி செய்வேன். பிரதமர் குறிப்பிட்டது போல் தமிழ் மிகவும் பழமையான மொழி. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று பேசினார். 

தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும்... - பட்டமளிப்பு விழாவில் தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி | R N Ravi