சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவன் மகன் - குவியும் வாழ்த்து

Son நடிகர் மகன் R.Madhavan vedant wingoldmedal மாதவன் வேதாந்த் தங்கப்பதக்கம் நீச்சல்போட்டி
By Nandhini Apr 18, 2022 06:55 AM GMT
Report

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் மாதவன். 

இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவும் வலம் வந்தார் மாதவன்.

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார் மாதவன். சமூக ரீதியான கருத்துக்களை தன் இணையத்தின் மூலம் பகிர்ந்து வருகிறார். 

மாதவனின் மகன் வேதாந்த். நீச்சலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்று வருகிறார்.

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் வேதாந்த் 7 பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த், நேற்று நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் அவர் வெள்ளி வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

தற்போது, 800 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இது குறித்து மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'உங்களுடைய ஆசிர்வாதத்தால் தொடர்ந்து வெற்றிகள் கிடைத்து வருகிறது.

இன்று 800 மீட்டர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. இதற்காக பயிற்சியாளர் பிரதீப் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள மாதவன் மகனுக்கு சினிமாத்துறையினர், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் என இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.