மாதவனுக்கு முத்தம் கொடுத்ததால எனக்கு அலர்ஜி வந்துருச்சு... - பிரபல நடிகை பேச்சு - ரசிகர்கள் அதிர்ச்சி
அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் மாதவன். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவும் வலம் வந்தார் மாதவன். இந்நிலையில், மாதவனுக்கு முத்தம் கொடுத்ததால அலர்ஜி வந்துருச்சு என்று மேடையில் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு பேசியுள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’படத்தில் பிபாஷா பாசு நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த பிபாஷா பாசு அதன் பின்னர் முழுவதும் பாலிவுட் சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தினார்.
நடிகை பிபாஷா பாசு நடிகர் மாதவனுடன் இணைந்து ‘ஜோடி பிரேக்கர்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகிறது.
சமீபத்தில் இப்படம் குறித்த சில நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்தார் பிபாஷா. அப்போது அவர் கூறுகையில், “நான் நடிகர் மாதவனுடன் ‘ஜோடி பிரேக்கர்ஸ்’ என்ற படத்தில் நடித்தேன். அப்போது, அப்படத்தில் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது.
அந்த முத்தக்காட்சியில் நடித்த பிறகு நான் மேக்கப் ரூமில் பல மணி நேரமாக அங்கேயே இருந்தேன். ஏனென்றால், மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் போது, அவரது வாயிலிருந்து வெங்காய வாசனை வந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை... அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் எனக்கு அலர்ஜியாகி விட்டது” என்றார்.
நடிகர் மாதவனுக்கு முத்தம் கொடுத்ததால் அலர்ஜி ஏற்பட்டு விட்டதாக பிபாஷா கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.