முதல் முறையாக இந்திய அணிக்கு கேப்டனாகிறார் ருத்துராஜ் கெய்க்வாட் - அணியை அறிவித்தது பிசிசிஐ!
சீனாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியினை அறிவித்துள்ளது பிசிசிஐ.
ஆசிய விளையாட்டு போட்டி
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டெம்பர் ௨௩-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டி அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
40 வகையான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும் இந்த போட்டிகளில் கிரிக்கெட்டும் ஒன்று. ஆசிய விளையாட்டில் முதல் முறையாக இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியையும் நேற்று பசிசிஐ அறிவித்தது.
இந்திய அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு.
இந்திய ஆண்கள் அணி
ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், சபாஷ் அஹமத், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங். மற்றும் ஸ்தாந்திபாய் வீரர்களாக யஷ் தாகூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்திய பெண்கள் அணி
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி.