அப்படி சொல்லாதடா சாரி - சஞ்சய் மஞ்சரேக்கரை பங்கமாக கலாய்த்த அஸ்வின்

By mohanelango Jun 08, 2021 10:15 AM GMT
Report

கிரிக்கெட் வர்ணனனயாளரும் முன்னாள் இந்திய அணி வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வீரர்களைப் பற்றி பல நேரங்களில் தரக்குறைவாகப் பேசி சர்ச்சைகளுக்கு உள்ளானவர்.

ஜடேஜாவை பற்றி தவறாக விமர்சித்து பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர். அந்த வகையில் சமீபத்தில் அஸ்வினிடம் வம்பிழுத்திருக்கிறார்.

அஸ்வினை கோலி, சச்சின் வரிசையில் ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என கூற முடியாது என ட்வீட் செய்திருந்தார். சமகால இந்திய கிரிக்கெட்டர்களில் சிறந்த ஒரு ஸ்பின்னராகவும், ஆல்ரவுண்டராகவும் விளங்குபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் அஸ்வினை எல்லா காலத்திலும் சிறந்த ஒரு வீரராக (All-Time Great) தன்னால் குறிப்பிட முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

அஸ்வின் இதற்கு அந்நியன் பட மீம் ஒன்றினை பயன்படுத்தி பதிலடி கொடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

 அஸ்வினின் நகைச்சுவையான பதிலை அவருடைய ரசிகரக்ள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.