நட்ட நடு ராத்திரியில்..மேட்ச் முடிந்த அடுத்த நொடியே பேட்டிங் பயிற்சியில் அஸ்வின் - வீடியோ வைரல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இரவில் அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அஸ்வின்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது.
தொடருக்கு இன்னும் 15க்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், நேற்றைய போட்டியின் பந்துவீசிய இந்திய அணி பவுலர்களில் சிறந்த எகனாமியான 4.7-ஐ அஸ்வின் வைத்துள்ளார். இதனால் அஸ்வினின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது. அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
பேட்டிங் பயிற்சி
அதனை ஒருநாள் கிரிக்கெட்டிலும் நிரூபிக்க அஸ்வின் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பவுலிங் பயிற்சி மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அஸ்வின் அதிக ஈடுபாட்டுடன் உள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு ஓய்வறைக்கு சென்றனர். ஆனால் அஸ்வின் மட்டும் பேட்டை எடுத்துக்கொண்டு, காலில் பேடை கட்டி மதனாத்தில் களமிங்கினார்.
அனைவரும் இவர் எங்கு செல்கிறார்? என்று பார்த்த நிலையில், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஸ்வின். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
— Nihari Korma (@NihariVsKorma) September 23, 2023