சர்வதேச விருதை வென்றுள்ள அமுதவாணனின் ‘கோட்டா’ திரைப்படம்!
இயக்குனர் பி.அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோட்டா திரைப்படம் சர்வதேச திரைப்பட விருது வென்றுள்ளது.
இயக்குனர் பி.அமுதவாணன் இயக்கத்தில் ‘கோட்டா’ திரைப்படம் உருவாகியுள்ளது.
சாதியை வைத்து வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலநிலையை உலகிற்குக் காட்டுவதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
கோட்டா திரைப்படம் ஏற்கனவே 43 சர்வதேச விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

தற்போது கோட்டா திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது மட்டுமல்லாமல், சிறந்த இயக்குனர் விருதையும் இந்தப் படம் வென்றுள்ளது.
இது குறித்து இயக்குனர் அமுதவாணன் பேசுகையில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் கோட்டா திரைப்படம் அங்கீகாரம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் 58 விருதுகளை வென்றதன் மூலம் இந்தப் படம் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் அனைத்து நடிகர்களின் நடிப்பையும் அவர்கள் பாராட்டினர் என்றும் படம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் இயக்குனர் அமுதவாணன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மீது துப்பாக்கிச் சூடு! பண்ணையாளர்கள் அச்சம் IBC Tamil
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil