30 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி - அப்போ உலக கோப்பை?

Cricket Quinton de Kock South Africa National Cricket Team
By Jiyath Sep 06, 2023 07:27 AM GMT
Report

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர். 

குயிண்டன் டி காக்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரும், விக்கெட் கீப்பரும் ஆவார் குயிண்டன் டி காக். இவருக்கு தற்போது 30 வயது ஆகிறது. இவர் கடந்த 2013ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 

30 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி - அப்போ உலக கோப்பை? | Quinton De Kock Retire From Odis After World Cup

இதுவரை 140 போட்டிகளில் விளையாடி 17 சதம், 9 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகவும் இருந்து வரும் இவர் 197 ஆட்டமிழப்புகளை (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்) எடுத்துள்ளார். 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செஞ்சூரியனில் 178 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஓய்வு

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023க்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள த்விட்டேர் பதிவில் "இந்தியாவில் நடைபெறும் உழைக்க கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து குயின்டன் டி காக் ஒய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்' என பதிவிட்டுள்ளது. இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.