பிரபல கிரிக்கெட் வீரரின் மோசமான மறுபக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி
டி20 உலகக்கோப்பை தொடரில் இன வெறி சர்ச்சையில் சிக்கியுள்ள தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிகாக்கை ரசிகர்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
துபாயில் மாலை 3:30 மணிக்கு போட்டி தொடங்கியது முதலே மிகப்பெரும் சர்ச்சை ஒன்று வெடித்தது. டாஸ் வென்ற தென்னாப்பிர்க்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இரு அணிகளும் ஆடும் லெவன் அணிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் ஆடும் லெவன் திடீரென மாற்றப்பட்டது.
அதற்கு காரணம் ஒவ்வொரு லீக் போட்டிக்கு முன்பும் கிரிக்கெட் வீரர்கள் கறுப்பினத்தவருக்கு ஆதவராக, முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியில்கூட இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் மண்டியிட்டு முன்னெடுப்பு எடுத்தனர். அந்தவகையில், தென்னாப்பிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்குவதற்கு முன்பும், வீரர்கள் முழங்கால் இட்டு கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் அப்போது, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், முழங்கால் இட மறுத்து நின்றுகொண்டிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மீது உடனடியாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.