ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த குயிண்டன் டி காக் - என்ன தெரியுமா?

quintondekock INDvSA SAvIND adamgilchrist
By Petchi Avudaiappan Jan 25, 2022 06:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வீரர் குயிண்டன் டி காக் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. கேப்டவுனில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில்  முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 287 ரன்களை எடுத்தது. 

இதில் அந்த அணியின் குவின்டன் டி காக் 124 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவினார். இந்த சதத்துடன் 29 வயதாகும் குவின்டன் டி காக் மொத்தமாக 17 சதங்களை ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். அவர் தான் ஒருநாள் தொடரின் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதையும்  வென்றார். 

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 16 சதங்களை அடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை குவின்டன் டி காக் முறியடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக இலங்கையின் குமார் சங்கக்கரா 23 சதங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.