அடுத்து இவர் வீட்டில் தான் ரெய்டு? - அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவலால் பரபரப்பு

admk ministersekarbabu sevoorramachandran
By Petchi Avudaiappan Oct 18, 2021 05:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

இன்னும் இரண்டு நாட்களில் குயின்ஸ் லேண்ட் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என தெரிவித்த அவர்,  தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என கூறினார். அந்த வகையில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தவறு செய்திருந்தால் நிச்சயம் அவரும் விசாரணை செய்யப்படுவார் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

அவரின் இந்த பதிலால் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.